ரூ.150 கோடி மதிப்பில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம்.. 4 ஏக்கர்.. 3 கோபுரங்கள்.. 12 மாடிகள்..!

Siva
வியாழன், 13 பிப்ரவரி 2025 (13:48 IST)
ரூபாய் 150 கோடியில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் டெல்லியில் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
டெல்லியில் 4 ஏக்கர் பரப்பளவில், மூன்று கோபுரங்களுடன் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு கோபுரத்திலும் 12 மாடிகள் உள்ளதாகவும் தகவல் நிலையாக உள்ளது.
 
இந்த கட்டிடத்தில் ஆர்எஸ்எஸ்-இன் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது என்றும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரால்  இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்காக 300 அறைகள், இரண்டு பிரம்மாண்டமான ஆடிட்டோரியங்கள், புல்வெளி மைதானம் மற்றும் மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ளது.
 
நூலகத்தில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த நூல்கள் உள்ளன என்றும், 8,500 ஆராய்ச்சி நூல்கள் உட்பட பல வகையான நூல்கள் உள்ளதாகவும் தெரிகிறது. மேலும், விவாத அரங்கம், நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாப்பிடும் உணவகம், பத்திரிகையாளர்களுக்கான அறை, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தங்குவதற்கான தனி அறை, வெளியிடங்களில் இருந்து வரும் ஊழியர்கள் தங்குவதற்கான தனி அறைகள், 5 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை ஆகியவையும் இந்த கட்டிடத்தில் உள்ளன.
 
இந்த அலுவலகத்தில் 3,500 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்