திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் ரூ.2,750 உதவித்தொகை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (16:48 IST)
ஹரியானா மாநிலத்தில் திருமணம் ஆகாதவர்கள் மற்றும் மனைவியை இழந்தவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹரியானா மாநிலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் ரூபாய் 2750 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். 
 
அதேபோல் 40 வயது முதல் 60 வயது வரை உள்ள மனைவியை இழந்த ஆண்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான தொகையை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
திருமணம் ஆகாதவர்கள் மற்றும் மனைவியை இழந்தவர்களுக்கு மாதாந்திர உதவி தொகை அறிவித்த ஹரியானா முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்