நாணயங்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (15:27 IST)
புதிய வடிவமைப்புடன் 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பழைய நாணயங்கள் குறித்தும் அறிவித்துள்ளது.  


 
 
பழைய 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்றும், யாரும் வாங்க மறுக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இதனால் இந்த சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது. எனவே, புழக்கத்தில் இருக்கும் பழைய 10 ரூபாய் நாணயங்கள் தொடர்ந்து செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
புதிதாக வந்துள்ள 10 ரூபாய் நாணயங்கள் ரூபாய் குறியீட்டுடனும், குறியீடு இல்லாமலும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
வித்தியாசமாக இருந்தாலும், இரண்டு நாணயங்களும் செல்லுபடியாக கூடியவை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்