புதிய 200 ரூபாய் நோட்டு நாளை முதல்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (13:24 IST)
புதிய 200 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.


 
 
கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்க கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்த மத்திய அரசு புதிய 500 ரூபாய் மற்றும் புதிதாக 2000 ரூபாய் நோட்டையும் அறிமுகம் செய்தது.
 
இதனையடுத்து பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். இந்நிலையில் தற்போது தான் ஓரளவுக்கு நிலமை சரியாகி பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிய 50 ரூபாய் நோட்டையும் புதிதாக 200 ரூபாய் நோட்டையும் அச்சடித்து வந்தது மத்திய அரசு.
 
இந்நிலையில் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் இதழ் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகளை ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தது.
 
இந்நிலையில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் நாளை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய 200 ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் காந்தி படமும் மற்றொரு பக்கத்தில் சாஞ்சி ஸ்தூபியின் படமும் உள்ளது. காந்தி படத்தின் அருகில் தேவநாகிரி எழுத்தில் 200 என எழுதப்பட்டுள்ளது. பார்வையற்றோர் தொட்டு உணரும் வகையில் இது அச்சிடப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்