புதிதாக அச்சிட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்னும் 10 நாட்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. எக்கனாமிக்ஸ் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகளை ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
50 கோடி ரூபாய் மதிப்பில் அச்சிடப்பட்டுள்ள இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகள் கருப்பு சந்தையில் சிக்காதவாறு ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளதாகவும், முன்னர் 2000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டபோது ஏற்பட்ட தவறுகள் மற்றும் சிக்கல்கள் இந்த முறை களையப்படும் எனவும் கூறப்படுகிறது.