ரிலையன்ஸ் ஜியோ என்று அறிமுகமானதோ அன்றில் இருந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டன. ஜியோவை சமாளிப்பது எப்படி என்று யோசித்து யோசித்தே மூளை மழுங்கிவிட்டது.
இந்த நிலையில் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அறிமுகம் ஆனது. இதனால் வியாபார நிறுவனங்கள் தங்கள் பில்லிங் மிஷினில் ஜிஎஸ்டி மென்பொருளை இணைப்பதில் தீவிரமாக உள்ளனர். இதனால் மென்பொருள் தயாரிக்கும் ஐடி நிறுவனங்கள் திடீரென பிசியாகின.
ஆனால் அதற்கும் வேட்டு வைத்துவிட்டது ஜியோ. புதிய ஜிஎஸ்டி மென்பொருள் ஒன்றை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜிஎஸ்டி மெனுவில் பல இலவசங்கள், சலுகைகள் இருப்பதால் அனைத்து வியாபாரிகள் இந்த மென்பொருளை வாங்க முன்வருகின்றனர்.