ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா மறைவு! பிரதமர் மோடி இரங்கல்..!

Mahendran
புதன், 27 மார்ச் 2024 (10:15 IST)
ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா நேற்று காலமான நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தாவுக்கு 94 வயது என்ற நிலையில் அவர் கடந்த சில நாட்களாக சிறுநீர் பாதை தொற்று பிரச்னையால் அவதிப்பட்டார். இதனையடுத்து அவர்  அவர் ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
 
இந்த நிலையில் ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
 
"மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ், ஆன்மீகம், சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். பலருடைய இதயங்களில், மனங்களில் அழியாத இடம் பதித்தவர். அவரது இரக்க குணமும் ஞானமும் பல தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவருடைய மறைவுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி" என்று பதிவு செய்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்