ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து: சோனியா காந்தி அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (09:48 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் உள்ள அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் அந்த அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் சோனியா காந்தி கடும் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது என்பதும் இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும் முக்கிய உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டிலிருந்து நிதி கிடைப்பதாகவும் விதிமுறைகளை மீறி ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து பணத்தை பெற்று வருவதாகவும் புகார் எழுந்தது
 
இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் சோனியா காந்தி அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்