கஜா புயலின் காரணமாக தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, கடலூர் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தமிழக அரசு தொடர்ந்து முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் 461 முகாம்கள் போடப்பட்டுள்ளனர். அதில் 81,698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கி வருகின்றனர். இன்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அந்த உணவு பொட்டலங்கள் மீது ரஜினியின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.