கடை முன்னாள் சிறுநீர் கழித்த நபர்; தட்டிக் கேட்ட முதியவர் படுகொலை!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (08:24 IST)
ராஜஸ்தானில் கடை முன்பு சிறுநீர் கழிக்க முயன்றவரை தடுத்த முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்த முதியவர் ஒருவர் சில தினங்கள் முன்னதாக அவரது கடை வாசலிலேயே கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் போன்ற ஆதாரங்கள் கிடைக்காத போதிலும் நபர்கள் மூலாமாக விசாரணை மேற்கொண்டவர்கள் குல்தீப் என்ற நபரையும் அவரது இரு நண்பர்களையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் குல்தீப் முதியவரின் கடை முன்பாக சிறுநீர் கழிக்க முயன்றதாகவும் அதை தடுக்க முதியவர் முயன்றபோது குல்தீப் மற்றும் அவரது நண்பர்கள் முதியவரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்