அக்பர் ஒரு பாலியல் வன்கொடுமையாளர்: ராஜஸ்தான் கல்வியமைச்சர் சர்ச்சை பேச்சு

Mahendran
வியாழன், 29 பிப்ரவரி 2024 (18:25 IST)
அக்பர் ஒரு பாலியல் வன்கொடுமையாளர்  என ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
 ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வி அமைச்சர் மதன் திலாகர் அவர்கள் பேசிய போது நாமெல்லாம் மாணவர்களாக இருந்தபோது அக்பர் மிகவும் நல்லவர் என்றுதான் படித்திருந்தோம் 
 
அக்பர் மிகவும் புத்திசாலி, ஆட்சி செய்வதில் சிறந்தவர் என்றே படித்திருந்தோம்.  ஆனால் அவர் ஒரு படையெடுப்பாளர்,  நம் நாட்டு மக்களுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை
 
அது மட்டும் இன்றி அவர் ஒரு பாலியல் வன்கொடுமையாளர். அவரது பெயரை இந்தியாவில் வைப்பது பாவம் என்று தெரிவித்துள்ளார் 
 
ஒரு மாநிலத்தின் கல்வி அமைச்சரே இவ்வாறு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்