ஓட்டல் அறையில் திடீரென புகுந்த சிறுத்தை.. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..!

Siva

வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:52 IST)
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் ஊழியரின் அறையில் திடீரென சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அச்சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டது. முதலுதவி அளித்த பிறகு சிறுத்தை வனத்திற்குள் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
ஜெய்ப்பூரில் உள்ள ஜஹாங்கீர் புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியரின் அறையில் திடீரென சிறுத்தை புகுந்தது. ஓட்டலின் ஊழியர் ஒருவர் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அறையில் ஒரு சிறுத்தை புகுந்துவிட்டதை அடுத்து அவர்  பதறி எழுந்து அலறியுள்ளார்.

ALSO READ: ஜனவரி 22ஆம் தேதிக்கு பின் அயோத்தி செல்ல ஆஸ்தா சிறப்பு ரயில்.. தமிழகத்தில் இருந்து 4 ரயில்கள்..!
 
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓட்டலில் இருந்த மற்ற ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் சிறுத்தையின் மீது கற்களை எறிந்து விரட்ட முயன்றனர். சிறிது நேரம் கழித்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் மீது மயக்க மருந்து செலுத்தினர். இதனால் சிறுத்தை மயங்கி விழுந்தது.
அதன் பின்னர், வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு அருகிலுள்ள காட்டிற்கு கொண்டு சென்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள அனைத்து ஓட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களும் தங்கள் வளாகங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்