கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு பாகிஸ்தான் முகநூல் நண்பரை திருமணம் செய்து கொண்ட பெண்..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (11:47 IST)
ராஜஸ்தானை சேர்ந்த இளம் பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு முகநூலில் நண்பரை பாகிஸ்தான் சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த  அஞ்சு என்ற பெண் திருமணம் ஆகி நான்கு வயது மற்றும் ஐந்து வயது குழந்தையுடன் ராஜஸ்தானில் வசித்து வந்தார். இந்த நிலையில் முகநூல் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நசருல்லா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் முகநூலில் பழகிய நிலைகள் திடீரென அஞ்சு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தான் சென்றுவிட்டார்.

அங்கு அவர் தனது இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் திருமணம் ஆகி சில மாதங்கள் கழித்து தனது குழந்தையை காண்பதற்காக மீண்டும் அஞ்சு இந்தியா வந்துள்ளார்.

இந்த நிலையில் தன்னை விவாகரத்து செய்யாமல் மறுமணம் செய்து கொண்டதாக தனது மனைவி மீது முதல் கணவர் புகார் அளித்துள்ள நிலையில் இந்தியா வந்த அஞ்சுவிடம்  காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.  

பாகிஸ்தானில் இரண்டாவது கணவருடன் சந்தோஷமாக இருப்பதாகவும் தனக்கு குழந்தைகள் ஞாபகம் வந்ததால் குழந்தைகளை பார்க்க வந்திருப்பதாகவும் தான் மீண்டும் பாகிஸ்தான் சென்று தனது இரண்டாவது கணவர் உடன் தான் வாழ இருப்பதாகவும் அவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்