2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடர் எங்கு நடக்கிறது? வெளியான தகவல்

செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:44 IST)
வரும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடரை ஐஸ்லாந்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
 
சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி. இந்த அமைப்புதான் உலகில் கிரிக்கெட் போட்டிகளை   நடத்தி வருவதுடன், ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களையும் கட்டுப்பாட்டில் வைத்து வழி நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில், வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன் டிராபி தொடரை ஐஸ்லாந்தில் நடத்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பம் தெரிவித்துள்ளது.
 
மேலும்,  வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி  மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடத்த இருந்த இந்தத் தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக  வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்