தடுத்து நிறுத்தப்பட்ட யாத்திரை: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு..!

Siva
புதன், 24 ஜனவரி 2024 (06:49 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை யாத்திரை தொடங்கிய நிலையில் அந்த யாத்திரை அசாமில் தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல்லால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அசாம் தலைநகர் கவுஹாத்திக்கு ராகுல் காந்தி வந்து கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் போலீஸ் தடுப்புகளை அடித்து நொறுக்கியதாகவும் தெரிகிறது. 
 
போலீசார் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அசாம் முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்ததாகவும் தெரிகிறது.  இதனை அடுத்து ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்  குறிப்பாக பேசி வேணுகோபால் கன்னையா குமார் ஆகிய காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.  
 
இந்த நிலையில் மாணவர்களாக நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம், நீங்கள் விரும்பியதை செய்ய அனுமதிக்க வேண்டும், உங்களை சுதந்திரமாக சிந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்