முதல்வர் பதவி தறேன்னு சொல்லியும் மாயாவதி ஒத்துக்கல! – ராகுல்காந்தி பகிர்ந்த தகவல்!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (12:00 IST)
உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து மாயாவதியுடன் பேசியதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெருவாரியான வெற்றி பெற்றுள்ளது. இதனால் மீண்டும் உ.பியில் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைத்துள்ளார். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் பின்னடைவை சந்தித்தன.

இந்நிலையில் சமீபத்தில் உத்தர பிரதேச தேர்தல் குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலின்போது காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து முதல்வராகுமாறு மாயாவதிக்கு நாங்கள் ஆலோசனை கூறினோம். ஆனால், அவா் எங்களுடன் பேசக் கூட மறுத்துவிட்டாா்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்