மோர்பி பால விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை; ராகுல் காந்தி

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (18:35 IST)
குஜராத்தில் நிகழ்ந்த மோர்பி பால விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விபத்தை மையப்படுத்திய அரசியல் செய்ய விரும்பவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
 ஒரு மாநிலத்திலோ அல்லது நாட்டிலோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது என்பது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிகழ்வாக உள்ளது 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலத்தில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல அரசியல் கட்சிகள் குஜராத் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குஜராத் விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் இந்த விபத்தில் மக்கள் பலர் உயிரிழந்தனர் என்றும் இதை அரசியலாக்கினால் பலியானவர்களை அவமானப்படுத்துவதாக இருக்கும் என்றும் தெரிவித்தார் 
 
இதனை அடுத்து ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்