இது பெரும் துயரம் - நீட் குறித்து ராகுல் காந்தி!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:21 IST)
நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய அரசுக்கு அறிவுறுத்தல். 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. 
 
அதன்படி நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் டவுன்லோட் செய்து வருகின்றனர். neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இந்த ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 
 
இதனிடையே, நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண் முடித்தனமாக இருப்பது துயரமானது என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்