கொரோனா பரவல் வேகமாக இருக்கும்போது ஏற்றுமதி ஏன் ? ராகுல் காந்தி கேள்வி!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:32 IST)
இந்தியாவில் இப்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்த மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை கணக்கில் கொண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தினசரி கொரோனா எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாக ஒரு லட்சத்தைத் தொட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நாம் கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது சரியானதுதானா?. தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் நத்தை வேகத்தில் செல்கின்றன. இப்படி தொடர்ந்தால் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட பல ஆண்டுகள் ஆகும்.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்