கர்நாடகாவின் 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (07:15 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பாதிப்பு அதிகம் இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன 
 
இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள ஏழு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் மைசூர் பெங்களூர் உள்ளிட்ட 7 இடங்களில் வரும் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் 20ஆம் தேதிக்குப் பின் உள்ள நிலைமையைப் பொறுத்து ஊரடங்கு நீடிப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார் 
 
பெங்களூரில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த ஊரடங்கு அவசியம் தேவைப்படுவதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்