மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி: பாஜக பிரமுகர் வலியுறுத்தல்!

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (06:53 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென பாஜக பிரமுகர் சந்திரகாந்த் பாட்டீல் அவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மீது ஊழல் புகார் கூறப்பட்டது. இதனை அடுத்து அவர் ராஜினாமா செய்தார் 
 
அதேபோல் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடி பொருள் நிரம்பிய வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஊழல் வழக்கில் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார், மற்றொரு அமைச்சரும் பதவி விலக வேண்டிய நிலையில் உள்ளார். 
 
எனவே 15 நாட்களுக்குள் இரண்டு அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கி உள்ளதால் அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக பிரமுகர் சந்திரகாந்த் பாட்டில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்