ரகுராம்ராஜனை எம்பி ஆக்குகிறதா ஆம் ஆத்மி?

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (15:44 IST)
முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரும் சிறந்த பொருளாதார மேதையுமான ரகுராம் ராஜனை ராஜ்யசபா எம்பியாக்க ஆம் ஆத்மி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.



 
 
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து கருத்து கூறியவர் ரகுராம் ராஜன். இதனால் பாஜக தலைவர்கள் இவர் மீது அதிருப்தி அடைந்தனர். இதனால் ஓய்வுக்கு பின்னர் இவருக்கு பணி நீட்டிப்பு கிடைக்கவில்லை
 
இந்த நிலையில் சமீபத்தில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் ஐந்து நபர்களில் ஒருவராக இருந்தார். இவருக்கு அமெரிக்காவின் பெடரல் வங்கி தலைவர் பதவியும் தேடி வந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் ரகுராம் ராஜனை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டு வருவது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்