தொப்புள் விவகாரம்: நடிகை ஏமி ஜாக்சன் ஆவேசம்!

ஞாயிறு, 30 ஜூலை 2017 (18:45 IST)
நடிகை டாப்ஸி சமீபத்தில் தனது தொப்புளில் தேங்காயை வீசினார்கள் என கூறியதை அடுத்து இதே மாதிரி எனக்கு நடந்திருந்தால் நான் தேங்காயை திருப்பி அடித்திருப்பேன் என ஆவேசமாக கூறியுள்ளார்.


 
 
நடிகை டாப்ஸி தனது முதல் பட அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். அப்போது, எனது முதல் படத்தில் எனக்கு எடுத்தவுடன் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.
 
நான் நடித்த முதல் படத்தின் இயக்குநர் பெரும்பாலும் அவர் அறிமுகப்படுத்திய நடிகைகளின் தொப்புகளில் பழம், பூ போன்றவற்றை வயிறு பகுதியில் போன்ற காட்சி இருக்கும். அதே போல் என் வயிற்றில் தேங்காவை வீசுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
 
தேங்காவை வயிற்றில் போடுவதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என சிரித்தபடியே கூறினார். டாப்ஸியின் இந்த வீடியோ வைரலாக பரவியது. இதனையடுத்து சக நடிகையான ஏமி ஜாக்சன் இந்த தொப்புள் தேங்காய் விவகாரத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியதாவது, தொப்புளில் தேங்காயை வீசுவது கொடுமை. இதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். எனக்கு இது போன்று நடக்காததை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி யாரவது தேங்காயை வீசினால் நாப் அந்த தேங்காயை எடுத்து அவர்கள் மீது திருப்பி வீசிவிடுவேன்.
 
நான் இப்படித்தான் செய்வேன் என அவர்களுக்கு தெரியும் என்பதால் என்னிடம் அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் அனைத்து நடிகைகளுக்கும் அப்படி நடப்பது இல்லை என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்