வேட்டி சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி! – தமிழிலேயே வாழ்த்துகள் தெரிவித்தார்!

Prasanth Karthick
ஞாயிறு, 14 ஜனவரி 2024 (12:36 IST)
நாளை தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று டெல்லியில் வேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடியுள்ளார் பிரதமர் மோடி.



நாளை தை முதல் நாளில் தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். தமிழக மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு தமிழ் பாரம்பரியமான வேட்டி, சட்டை மற்றும் துண்டு சகிதம் வந்த பிரதமர் மோடி, பொங்கல் தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

ALSO READ: ராம ராஜ்யத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் அமைப்பையே எதிர்ப்பவர்கள் ஆவார்கள்: துணை ஜனாதிபதி

பின்னர் அங்கு வந்தவர்களிடையே பேசிய பிரதமர் மோடி தமிழில் “இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று கூறினார். இந்த பொங்கல் விழாவில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்