மத்திய ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் பாராட்டு…

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (16:15 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. கொரோவைத் தடுக்க இந்திய அரசு வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட நம் இந்தியாவில் பலகோடி மக்கள் தினக்கூலி செய்வரும் நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அதனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பல முக்கிய முடிவுகளை வெளியிட்டனர். இந்நிலையில், இன்றும் ரிசர்வ் வங்கி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.

இதுகுறித்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,ரிசர்வ் வங்கியின்  ஏழை, எளிய மக்கள், விவசாயிகளுக்கு வணிகர்களுக்கு உதவும் எனதெரிவித்துள்ளார்.

அதில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்புகள், நாட்டில் பணப்புழகத்தை அதிகரிக்கும். இது விவசாயிகள்,ஏழைகள். சிறுதொழில் செய்பவர்களுக்கு பயன் அளிக்கும் , பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்