விநாயகர் சதுர்த்தியன்று மசோதாக்களை நிறைவேற்றுவது சிறப்பு வாய்ந்தது: பிரதமர் மோடி

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (13:54 IST)
விநாயகர் சதுர்த்தியன்று மசோதாக்களை நிறைவேற்றுவது சிறப்பு வாய்ந்தது என புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை ஆற்றினார். அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:
 
நாட்டு மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள், புதிய இந்தியாவை நோக்கி, வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம், புதிய சிந்தனைகளுடன் இந்தியா முன்னேறி வருகிறது;
 
புதிய நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும், விநாயகர் சதுர்த்தியன்று மசோதாக்களை நிறைவேற்றுவது சிறப்பு வாய்ந்தது
 
30,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வியர்வையில் உருவானது இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் உருவானது. எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள டிஜிட்டல் புத்தகத்தில் அனைவரது விவரங்களும் அடங்கியுள்ளன. புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது .இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்