ஜிம் சென்று வொர்க் அவுட் செய்த பிரதமர் மோடி! – வைரலாகும் வீடியோ!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (15:48 IST)
உத்தரபிரதேசம் சென்ற பிரதமர் மோடி அங்கு உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் வொர்க் அவுட் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பல புதிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க சென்று வந்த பிரதமர் மோடி தற்போது மீண்டும் சில நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றுள்ளார்.

அந்த வகையில் உத்தரபிரதேசம் மீரட்டில் புதிதாக கட்டப்பட உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைகழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 700 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பல்கலைகழகம் நிர்மாணிக்கப்பட உள்ளது.

இந்த விழாவுக்கு பிறகு மீரட்டில் உள்ள உடற்பயிற்சி மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள உடற்பயிற்சி உபகரணங்களை உபயோகப்படுத்தி பார்த்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்