உளவுத்துறை தகவல்கள் திருட்டு: அமைச்சரவை கூட்டங்களில் செல்ஃபோன் பயன்படுத்த தடை

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (17:28 IST)
சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை எதிர்க்கொள்ள அமைச்சரவை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு இனி செல்ஃபோன்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனிமேல் அமைச்சரவை கூட்டங்கள் நடைபெறுகின்ற பொழுது ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபைல் போன்கள் அனுமதிக்கப்பட மாட்டாது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உளவுத்துறைகளால், தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதால், முக்கிய துறைகளில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய செல்ஃபோன்களை அரசு கம்யூட்டர்கள் மற்றும் மடிக்கணினிகளில் இணைக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்