உலகம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பை! 5-ல் ஒரு பங்கு இந்தியாவில்..? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Prasanth Karthick
திங்கள், 9 செப்டம்பர் 2024 (12:21 IST)

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உருவாகும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

 

 

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பு சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மனிதர்கள் தொட முடியாத கடலின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரென்ச் வரை பிளாஸ்டிக் குப்பைகள் பரவிக் கிடக்கின்றன. ஆனால் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் கழிவுகளின் உருவாக்கம் அதிகரித்து வருகிறது.

 

இதுகுறித்து உலக அளவில் அதிக பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளை நேச்சர் ஜர்னல் ஆய்வு மேற்கொண்டு பட்டியலிட்டுள்ளது. அதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டு சுமார் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நாளும் சராசரியாக 120 கிராம் பிளாஸ்டிக் குப்பைகளை உற்பத்தி செய்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

இந்த அளவானது உலக அளவில் ஆண்டுதோறும் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் 5ல் ஒரு பங்கு ஆகும். இந்தியாவிற்கு அடுத்தப்படியாக 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளுடன் நைஜீரியா இரண்டாவது இடத்திலும், இந்தோனேஷியா 34 லட்சம் டன் கழிவுகளுடன் 3வது இடத்திலும் உள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்