பெண் பேய்களின் கூடாரமாக மாறிய கிராமம்: தெறித்து ஒடும் ஆண்கள்!!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (19:21 IST)
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஓர் கிராமத்தில் பெண் பேய்களின் பயத்தால் மக்கள் அந்த கிராமத்தையே காலி செய்து சென்றுள்ளனர்.  


 
 
தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள காசிகுடா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன.
 
இக்கிராமத்து மக்கள் பெரும்பாலும் கல் உடைப்பதையே தொழிலாக வைத்திருந்துள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் இரவு நேரங்களில் பெண் பேய்கள் உலாவருவதாக நம்பப்பட்டுள்ளது. 
 
இரவு நேரங்களில் உலாவரும் பெண் பேய்கள் அங்குள்ள ஆண்களை குறிவைத்து தாக்குவதாக ஊர்க்கார்ர்கள் நம்பி வந்தனர். மேலும், பெண் பேய்கள் குறித்து தினம் ஒரு கதை கிளம்பியது.
 
இதனால் மொத்த கிராமமும் ஊரை காலி செய்துவிட்டு, அருகிலுள்ள  இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. தற்போது அந்த கிராமம் பெண் பேய்களின் கூடாரமாக மாறிவிட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்