பெயரை மாத்திட்டீங்க விளம்பரத்தை எப்போ மாத்துவீங்க! – அழகு பொருள் நிறுவனங்களுக்கு கேள்வி!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (13:02 IST)
பிரபல யுனிலிவர் தயாரிப்பான ஃபேர் அண்ட் லவ்லி தனது பெயரை மாற்றி கொண்டுள்ளது போல விளம்பரத்தையும் மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

’வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை அடிப்படையாக கொண்டுள்ள இந்தியாவில் பல நிறத்தை கொண்ட மக்களும் வசிக்கிறார்கள். இந்நிலையில் இந்துஸ்தான் யுனிலிவர் தயாரிப்பான ‘ஃபேர் அண்ட் லவ்லி’ இதுநாள் வரையிலும் தங்கள் தயாரிப்பு கருப்பாய் இருப்பவர்களை வெள்ளையாக மாற்றும் என்றே விளம்பரம் செய்து வந்தது. இந்நிலையில் வெள்ளையாய் இருப்பது மட்டுமே அழகு என்ற தவறான எண்ணத்தை இதுபோன்ற அழகு சாதன பொருட்கள் தொடர்ந்து ஏற்படுத்துவதாக பலர் கூறிவந்தனர்.

இதை தொடர்ந்து அனைத்து நிறமும் அழகுதான் என்பதை ஏற்றுக்கொண்டு தங்களது தயாரிப்பில் உள்ள ஃபேர் (வெள்ளையழகு) என்ற வார்த்தையை நீக்குவதாகவும் அதற்கு பதிலாக க்ளோவ் என்ற வார்த்தையை உபயோகிப்பதாகவும் யுனிலிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் வெறும் பெயரில் மட்டும் மாற்றம் செய்யாமல் விளம்பரங்களில் கருமை நிறம் கொண்டவர்களை தாழ்வாக காட்டுவது உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்றும், அதுபோன்ற முந்தைய விளம்பரங்களை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

ஃபேர் அண்ட் லவ்லி செய்தது போலவே மற்ற அழகு பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் நிற ரீதியான பாகுப்பாட்டை விளம்பரங்களிலோ அல்லது தயாரிப்பு பொருட்களின் பெயர்களிலோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் குரல்கள் ஒலித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்