டெல்லி செல்லும் ரெயில்களில் பார்சல் சேவை திடீர் நிறுத்தம்..! என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (14:43 IST)
நான்கு நாட்களுக்கு டெல்லி செல்லும் ரயில்களில் பார்சல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லியில் வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாட இருப்பதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் விமானங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் கோவில்கள் உள்ளிட்ட பகுதியில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் அதாவது ஜனவரி 23 முதல் ஜனவரி 26ஆம் தேதி வரை டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் அனைத்து வகையான பார்சல் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்