குஜராத் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையான கட்சு என்ற மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடக்கு பகுதி வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒரு நபரை பிடித்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் பாபு அலி என்றும் தெரியவந்துள்ளது. அவர் எதற்காக இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வந்தார்? ஏதேனும் தீவிரவாத செயலில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் சட்டவிரோதமாக ஒரு நபர் நுழைய முயன்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.