ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு…!

திங்கள், 13 ஜனவரி 2025 (08:18 IST)
கடந்த ஆண்டு இறுதியில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற சிறுவன் 1.1 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மீது ஆர்வம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ ஐபில் தொடர் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது. மார்ச் 21 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி மே 25 ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

கிட்டத்தட்ட  2 மாதங்கள் 4 நாட்கள் ஐபிஎல் தொடர் வெகு சிறப்பாக இந்தியாவின் பல மைதானங்களில் நடக்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்