தக்காளிக்கே இந்த திணறலா..? இன்னும் நிறைய இருக்கு: இந்தியா vs பாகிஸ்தான்

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (19:15 IST)
கடந்த 14 ஆம் தேதி புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இதன் பின்னர், இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டு வந்த வரிச்சலுகைகளை ரத்து செய்தது. இதன் விலைவாக பாகிஸ்தானுக்கு 200% வரி போடப்பட்டது. 
 
தற்போது, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு வந்த தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு காய்கறிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த திடீர் தட்டுப்பாட்டால் காய்களின் விலை உயர்ந்துள்ளது. அதாவது, தக்காளி கிலோ ரூ.250, பச்சை மிளகாய் கிலோ ரூ.160, சிவப்பு மிளகாய் ரூ.300, இஞ்சி ரூ.150, உருளைக்கிழங்கு ரூ.70, வெங்காயம் ரூ.90, கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ.110 என்ற விலையில் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்