எல்லை மறந்த காதல்; அத்துமீறி இந்தியாவில் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (16:17 IST)
ஆன்லைனில் பழகிய பெண்ணை நேரில் சந்திப்பதற்காக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த முகமது அஹ்மர் என்ற 21 வயது இளைஞர் ஆன்லைன் மூலமாக மும்பையை சேர்ந்த பெண் ஒருவருடன் பேசி பழக்கமாகியுள்ளார். அந்த பெண்ணை நேரில் சந்திக்க விரும்பிய அவர் அனுமதியின்று பஞ்சாப் வழியாக பாகிஸ்தான் – இந்தியா எல்லையை கடந்துள்ளார். அப்போது இந்திய ராணுவத்திடம் அவர் சிக்கியுள்ளார்.

அவர் பயங்கரவாதியா என்பது குறித்து விசாரித்த பாதுகாப்பு படையினர் பின்னர் அவரை ஸ்ரீகங்காநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆன்லைன் காதலியை தேடி எல்லைத் தாண்டி வந்து இளைஞர் சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்