ஆம், ஐபோன் 12 ப்ரோ மாடல் மீது அமேசானில் ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஐபோன் 12 ப்ரோ மாடல் ரூ. 1,19,900 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 94,900 என அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதேபோல 256 ஜிபி மாடல் விலை ரூ. 99,900 என்றும் 512 ஜிபி விலை ரூ. 1,07,900 என்றும் மாற்றப்பட்டு இருக்கின்றன.