பிரதமர் மட்டும் சீன நிதியை பெறலாமா? – கேள்விக்கு மறுக்கேள்வி கேட்கும் ப.சிதம்பரம்!

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (10:58 IST)
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சீன நிறுவனங்களிடம் நிதி பெற்றதாக பாஜக தெரிவித்துள்ள குற்றச்சாட்டிற்கு பதில் கேள்வி கேட்டுள்ளார் ப.சிதம்பரம்.

லடாக் எல்லையில் சீன – இந்தியா ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து மத்தியில் ஆளும் பாஜக மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி. இந்நிலையில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது சீன நிறுவனங்களிடம் ஏராளமாக நிதி வாங்கியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் விளக்கமளிக்கப்படாத நிலையில் பதில் குற்றச்சாட்டை வைத்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர் “2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால் 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவின் கேள்விகளுக்கு காங்கிரஸால் சரியான விளக்கத்தை அளிக்க முடியாததால் இப்படியாக பதில் கேள்வி கேட்டு திசை திருப்புகிறார்கள் என பாஜக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்