6 போலீசாருக்கு ஒருநாள் சிறை தண்டனை: சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (18:48 IST)
ஆறு போலீசாருக்கு ஒரு நாள் சிறை தண்டனை விதித்து உத்தரப்பிரதேச மாநில சட்டசபை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த உரிமை மீறல் சம்பவத்தில் ஆறு போலீசாருக்கு ஒருநாள் சிறை தண்டனை விதித்து சபாநாயகர் திர்ப்பளித்துள்ளார்.
 
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் இன்று அளித்த தீர்ப்பில் சட்டசபை வளாகத்தில் உள்ள அறையில் ஆறு பேரும் ஒரு நாள் அடைக்கப்படுவார்கள் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
பாஜக எம்எல்ஏ சாலில் விஷ்னோய் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற போது இந்த ஆறு போலீசார் அத்துமீறி நடந்ததாகவும் அவர் சட்டசபையில் உரிமை மீறல் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை செய்த சட்டப்பேரவை சபாநாயகர் எம்எல்ஏவை தடுத்த ஆறு போலீசாருக்கு ஒரு நாள் சிறை தண்டனை விதைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்