முதியவர்களை ஏமாற்றி பல கோடி முறைகேடு.. அமெரிக்காவில் இந்தியருக்கு 51 மாதம் சிறை தண்டனை..!

ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (11:02 IST)
அமெரிக்காவில் முதியவர்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு 51 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பதும் பலர் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும் சிலர் சொந்த தொழில் செய்து வருகின்றனர் என்பதன் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலர் கௌரவமான முறையில் வாழ்ந்து வரும் நிலையில் ஒரு சிலர் கரும்புள்ளியாக முறைகேடு செய்து நாட்டிற்க்கே கெட்ட பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் தெற்கு கரோலினா என்ற மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜீல் பட்டேல் என்பவர் இந்தியாவில் செயல்பட்டு வரும் கால் சென்டர் மூலம் அமெரிக்காவில் உள்ள முதியவர்கள் பலரை ஏமாற்றி பல கோடி முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. 
 
இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜீல் பட்டேல் அமெரிக்க போலீஸ் சாரார் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணையை நடந்து வந்தது.
 
இந்த நிலையில் தெற்கு கரோலினா கோர்ட் ஜீல் பட்டேலுக்கு 51 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்