கங்குலிக்கு நெஞ்சு வலி இல்லை: கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனை விளக்கம்

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (18:14 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெஞ்சுவலி வந்ததை அடுத்து கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் சில நாட்களில் அவர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த கங்குலிக்கு மீண்டும் இன்று நெஞ்சுவலி வந்ததாகவும் இதனை அடுத்து அவர் மீண்டும் கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. இந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி கங்குலிக்கு நெஞ்சு வலி இல்லை என்று கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அவர் வழக்கமான இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று அல்லது நாளை அவர் வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கங்குலிக்கு நெஞ்சு வலி இல்லை என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்