கருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை- நிதி அமைச்சர்

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (16:14 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது. அதேபோல் கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை நோய்களும் வேகமாகப் பரவிவருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறியுள்ளதாவது:

கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆம்புலன்ஸ், பல்ஸ் ஆக்சிமீட்டர், ரெம்டெசிவி, சானிடைசர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாகவும், கொரொனா தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்