இந்திரா காந்தி பெயரில் இனி திரைப்பட விருது இல்லை.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு..!

Mahendran
புதன், 14 பிப்ரவரி 2024 (13:57 IST)
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் திரைப்பட விருது வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி அவரது பெயரில் திரைப்பட விருது இல்லை என மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது வழங்கும் போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இனி அந்த விருது இந்திரா காந்தி பெயரில் வழங்கப்படாது என்றும், அதற்கு பதிலாக சிறந்த அறிமுக இயக்குனர் விருது என்று மட்டும் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
அதேபோல் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படத்திற்கான நர்கீஸ் தத் விருது பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி நர்கிஸ் தத் பெயரிலும் விருது இல்லை என்றும் சிறந்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்திரா காந்தி பெயரில் உள்ள விருதின் பெயரை மாற்றியதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்