பல்பு கொடுத்த நிர்மலா; பல்பு வாங்கிய நெட்டிசன்ஸ்!!

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (15:54 IST)
மத்திய நிதி அமைச்சர் கூறியதாக சமூக வலைத்தளங்களில், வைரலாகும் தகவல் உண்மை இல்லை என தற்போது தெரியவந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது, உஜ்வாலா திட்டத்தின் கீழ் 35 கோடி எல்.இ.டி. பல்புகள் வழங்கி இருப்பதாக கூறினார்.

ஆனால் அவர் உரையாற்றிய வீடியோவின் கீழ், 35,000 கோடி எல்.இ.டி பல்புகளை வழங்கியிருப்பதாக தவறான தலைப்பு கொண்டு சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

அந்த தவறான தலைப்பு கொண்ட பதிவுகளை நெட்டிசன்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரும், நிர்மலா சீதாராமனை கேலி செய்யும் வகையில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது உண்மை தகவலை பாஜக வலைத்தளம் உறுதி செய்துள்ளது. இதனால் நிர்மலா சீதாராமன் உஜ்வாலா திட்டத்திற்கு கீழ் பல்பு வழங்கினாலும், தற்போது நெட்டிசன்கள் பல்பு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்