ஆந்திராவிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு: அமைச்சர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (19:34 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் தினமும் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை இருப்பதாகவும் ஆக்ஸிஜன் சிலிண்டரின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆந்திர மாநிலத்திலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆல நானி என்பவர் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார். நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் இரவு நேர ஊரடங்கின்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்றும் மீறி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உச்சத்தில் சென்று கொண்டிருப்பதை அடுத்து இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்