கட்டுமான தொழிலாளர்களுக்கும் பேருந்துகளில் டிக்கெட் இல்லை!

Webdunia
புதன், 4 மே 2022 (18:02 IST)
கட்டுமான தொழிலாளர்களுக்கும் பேருந்துகளில் டிக்கெட் இல்லை!
ஏற்கனவே பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லை என்ற நிலையில் தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்கும் டிக்கெட் இல்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது
 
இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது டெல்லியில் ஆட்சி நடத்திவரும் ஆம் ஆத்மி கட்சி தான் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மகளிர்களை அடுத்து டெல்லியில் உள்ள கட்டுமான தொழிலாளர்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல் தெரிவித்துள்ளார்
 
 இதனால் 10 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்