நீட் பயிற்சி மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை.. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (08:06 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் பயிற்சி பெற்ற மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியைப் ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் பயிற்சி மையங்களில் படித்து வரும் நிலையில் அவர்களில் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 15 மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 18 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெயர் பர்வீன் என்றும் தெரியவந்துள்ளது. நேற்று அவர் தங்கியிருந்த விடுதியில் தூக்கில் தொங்கியதாகவும் இதனை அடுத்து அவரது பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 
 
நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என பெற்றோர் அழுத்தம் கொடுத்ததால் அவர் மன உளைச்சலில் இருந்து உள்ளார் என்றும் அதுமட்டுமின்றி விடுதியில் உள்ள உணவு தனக்கு பிடிக்கவில்லை என்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கே தனக்கு பிடிக்கவில்லை என்றும் கடந்த சில நாட்களாக அவர் கூறி வந்ததாகவும் தெரிகிறது. 
 
இந்த ஆண்டில் மட்டும் நீட் பயிற்சி பெறும் மாணவர்கள் மொத்தம் ஐந்து பேர் தற்கொலை செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்