காஷ்மீர் தலைமை செயலகத்தில் இறக்கப்பட்ட மாநிலக்கொடி: பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி!

Webdunia
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (22:58 IST)
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள தலைமை செயலகத்தில் 370வது சிறப்பு பிரிவு நீக்குவதற்கு முன் காஷ்மீர் மாநிலத்திற்கு என தனிக்கொடி தலைமைச்செயலகத்தில் பறந்த நிலையில் தற்போது  ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலக் கொடி அகற்றப்பட்டு, தேசியக் கொடி மட்டுமே பறக்கவிடப்பட்டுள்ளது.
 
 
காஷ்மீர் மாநிலத்திற்கு என சொந்தக்கொடியை வைத்துக்கொள்ள கடந்த 1952ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அனுமதி அளித்தார். இந்த நிலையில் தற்போது அந்த கொடி அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
காஷ்மீர் மாநிலத்தின் 370வது சிறப்பு அந்தஸ்து அகற்றப்பட்டு விரைவில் ஜம்முகாஷ்மீர், லடாக் என இரு யூனியன்களாக பிரிக்கப்படவுள்ள நிலையில் காஷ்மீர் மாநில கொடி அகற்றப்பட்டு தற்போது தேசியக்கொடி மட்டும் பறக்கவிடப்பட்டுள்ளது என்பதும், இதன்மூலம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை பாகிஸ்தான், சீனா உள்பட உலக நாடுகளுக்கு இந்தியா புரிய வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்