தோனியின் சாதனையை முறியடித்த நரேந்திர மோடி!: எப்படி தெரியுமா?

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (12:50 IST)
இந்தியாவின் மதிப்பு வாய்ந்த மனிதர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பல முக்கியஸ்தர்களை வரிசைப்படுத்தும் இந்த பட்டியலில் நரேந்திர மோடி முதலிடம் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலானது மக்களால் அதிகம் பேசப்பட்டும், இணையங்களில் அதிகமாக தேடப்பட்டும் உள்ள நபர்களை மையப்படுத்தி கணிக்கப்படுகிறது. அதன்படி இந்தியாவில் அதிகம் மதிக்கப்படும் நபராக பிரதமர் மோடி முதலிடத்திலும், கிரிக்கெட்வீரர் மகேந்திர சிங் தோனி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் இதேபோல் எடுக்கப்பட்ட பட்டியலில் மகேந்திர சிங் தோனி முதலிடம் பெற்றிருந்தார்.

தற்போது அந்த சாதனையை முறியடித்து முதலிடம் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்