புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் என்.ரங்கசாமி முதல்வராக பங்கேற்றார். நடந்து முடிந்த புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதில் மெஜாரிட்டி என்.ஆர்.காங்கிரஸ் என்பதால் அக்கட்சியினர் ஒருமனதாக என்.ரங்கசாமியை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று அவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.க. கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.